செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (17:51 IST)

நீர் சத்துக்கள் அதிகம் நிறைந்து காணப்படும் தர்பூசணி !!

தர்பூசணியில் 90% தண்ணீரை கொண்டது. இந்த பழம் இயற்கையாகவே நீர் மற்றும் இனிப்பை கொண்டது. தர்பூசணியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.


இதில் அதிகமான நீர் சத்து மற்றும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கொண்டது.

தர்பூசணியில் இரும்புச் சத்துக்கள் அதிமாக இருப்பதால் இது நம் உடலுக்கு அதிக நன்மையை கொடுக்கிறது. தர்பூசணிக்கு இன்னொரு பெயரும் உண்டு.

தர்பூசணியில் நீர் சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடலில் உள்ள சூட்டை தணிக்க வல்லது.

அதிகமான உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இந்த தர்பூசணியை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது மற்றும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுகிறது.