1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (17:15 IST)

வெறும் வயிற்றில் வெண்பூசணி சாறு குடிப்பதால் என்ன நன்மைகள் !!

white pumpkin juice
வெண்பூசணி சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கிறது.


வெண்பூசணி நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் அதிகம் கொண்டது இது தவிர வைட்டமின் சி, வைட்டமின், நியாசின், தயாமின், ரிபோபிளவின் போன்றவை வைட்டமின் சத்துக்களும், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற தாது சத்துக்களும் கொண்டது.

வெண்பூசணிக்கு உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கழிவுகளை நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் இதற்கு உண்டு.

சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணம் ஆவதோடு நெஞ்செரிச்சல் வயிறு உப்புசம் போன்ற பிரச்சினைகளும் குணமாகும் மற்றும் இதில் இருக்கக்கூடிய சைபர் பைபர் அல்லது கரையக்கூடிய நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கும்.

இந்த பூசணி ஸ்பாஞ்ச் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும் இது குடலின் உட்பகுதியில் ஆங்காங்கே ஒட்டிக் கொண்டிருக்க கூடிய உணவுகளையும் நச்சுக்களையும் உறிஞ்சி வெளியேற்றிவிடும்.

மற்றும் உடலில் நீர்ச்சத்தை அதிகப்படுத்துவதோடு கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் தூண்டி இரத்தத்தில் இருக்கக்கூடிய தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றும்.