வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (14:07 IST)

பேய்மிரட்டி மூலிகையின் அற்புத மருத்துவ பலன்கள் !!

Pei mirati
பேய்மிரட்டி இலைகளை நீரில் இட்டு காய்ச்சி, அந்த நீரில் ஆவி பிடித்துவந்தால் காய்ச்சல் விலகும். சளி காய்ச்சல் குணமாகும்.


பேய்மிரட்டியின் பொதுவான மருத்துவ குணங்களாக, வாதம் எனும் கெட்டகாற்றை உடலில் இருந்து வெளியேற்றும் தன்மை மிக்கது. உடலில் உள்ள நச்சுநீரை வியர்வையின் மூலம் வெளியேற்றும் ஆற்றல்மிக்கது. உடலில் ஏற்படும் அசதி சோர்வு மற்றும் தளர்ந்த உடலை, வலுவாக்கும் தன்மை மிக்கது.

சிறிது ஓமம் மற்றும் மிளகு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் இட்டு நன்கு வறுத்து, அதில் அரை லிட்டர் தண்ணீர் விட்டு கொதித்ததும், அதில் பேய்மிரட்டி இலைகளை ஒன்றிரண்டாக கைகளால் பிய்த்து, நீரில் இட்டு, கொதித்து வந்ததும் அந்த நீரை தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை தேவைக்கேற்றபடி, குழந்தைகளுக்கு கொடுத்துவர, குழந்தைகளின் பேதி நிற்கும்.

பல் முளைக்கும் நேரங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் பேதிக்கு, இது நல்ல மருந்து. பேய்மிரட்டி இலைகளை சாறெடுத்து, அதை சுடுநீரில் கலந்து கொடுத்தாலும், பல் முளைக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பேதியை இது தணிக்கும்.

பேய்மிரட்டி வேர்களை நன்கு அலசி தூய்மையாக்கி, குழந்தைகள் கைகளில், கழுத்தில் நூல் கயிற்றில் கட்டிவைக்க, குழந்தைகள் இந்த வேரை அவ்வப்போது வாயில் வைத்து சுவைத்து வர, அதன் மூலம் குழந்தைகளின் வயிற்று வலி மற்றும் மனபயம் போன்ற பாதிப்புகள் விலகி, நன்கு பசித்து சாப்பிடுவார்கள், உடல் நலமாகும்.