திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : புதன், 6 ஏப்ரல் 2022 (17:04 IST)

இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதா செம்பருத்தி டீயில் !!

Hibiscus flower
செம்பருத்தி மலரை நமது உணவுகளில் சேர்த்து கொள்வதால் உடலில் உள்ள சோர்வு நீங்கும் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.


4 செம்பருத்தி இதழ்களை எடுத்து அவற்றின் இதழ்களை தனியாக பிரித்து எடுத்துக்கொள்ளவும். இப்போது ஒரு சிறிய பாத்திரத்தில் 1 டம்ளர் தணண்ணீர் ஊற்றி அவை சூடானதும் செம்பருத்தி இதழ்களை சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் சிறிதளவு இஞ்சி சேர்த்து நன்கு கொதிக்க விட்டு கீழே இறக்கவும். அதன் பின்னர் அவற்றை ஒரு வடிகட்டியில் வடிகட்டி அருந்தவும்.

செம்பருத்தி மலர்களை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். மற்றும் அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். இதன் காய்ந்த இதழ்களை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.

இந்த செம்பருத்தி உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லதாகவும், சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு முக்கிய பொருளாகவும் உள்ளது.

வெயில் காலங்களில் ஏற்படக்கூடிய உடல் உஷ்ணத்தை தவிர்த்து உடம்பினை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. உடல் உஷ்ணத்தால் வரக்கூடிய வாய்ப்புண், வயிற்று புண்களை சரிசெய்து உடல் வெப்பநிலையை சமநிலையை கொடுக்கிறது.

பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அனைத்திற்குமே எது ஒரு நல்ல தீர்வை கொடுக்கிறது. முறையற்ற மாதவிடாய் , அதிகமான உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல், கருப்பையில் ஏற்படக்கூடிய நீர்கட்டிகள் போன்றவற்றுக்கு நல்ல பயனை அளிக்கிறது.