ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (17:29 IST)

மாம்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகளும் அதன் அற்புத பலன்களும் !!

mango-Fruits
மாம்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தி, செரிமான ஆரோக்கியம் மற்றும் கண்பார்வை போன்ற ஆரோக்கிய நன்மைகளையும் தரக்கூடியவை.


மாம்பழத்தில் பாஸ்பரஸ், பாந்தோத்தேனிக் அமிலம், கால்சியம், செலினியம் மற்றும் இரும்புச்சத்து சிறிய அளவில் உள்ளது.

மாம்பழம் வைட்டமின் A இருப்பதால், இது முடி வளர்ச்சியையும், சரும செல்களின் உற்பத்தியையும் ஊக்குவிக்கிறது. இது தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

மாம்பழத்தில் ஏராளமான நீர் மற்றும் நார்ச்சத்து இருப்பதால், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது.

கண்களை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஊட்டச்சத்துக்கள் மாம்பழத்தில் நிறைந்துள்ளது.