1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இழந்த சக்தியை மீண்டும் கிடைக்க செய்யும் தூதுவளை !!

தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பு களையும், பற்களையும் பலமாக்கும்.


தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து, அதனுடன் நெய் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு சாப்பிட்டு வர எலும்புகள் உறுதியாகி இரும்பு போல உறுதியுடன் இருக்கும்.
 
தூதுவளையை நன்கு மை போல அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம், உஷ்ணம் குறையும். உஷ்ணம் குறைவதால் ஆண்களுக்கு இந்திரியம் அதிகம் உற்பத்தியாகி ஆண்மையைக் அதிகரிக்கும்.
 
தூதுவளை இலை மற்றும் வெற்றிலை இரண்டையும் சம அளவு எடுத்து காலை வேளையில் மென்று தின்றால் சளி மறைந்து விடும். காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்ததாகும்.
 
தூதுவளைக் காயை ஊறுகாய் போல செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான பித்தம் குணமாகும். தூதுவளை அற்புதமான உடல் தேற்றி இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர சீக்கிரத்தில் முதுமை தோற்றம் ஏற்படாது. முதுமை காரணமாக வாடுபவர்கள் தூதுவளையை தினசரி உண்டு வர இழந்த சக்தி மீண்டும் கிடைக்கும்.
 
தூதுவளையுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலுவடையும். மேலும் இருமல், இரைப்பு, சளி முதலிய பிரச்சனைகள் குணமாகும்.
 
தூதுவளை பழத்தை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி, அந்த பொடியை புகை பிடிப்பது போல செய்து வர, இரைப்பு, இருமல், மூச்சுத் திணறல், சளி போன்றவை தீரும்.