திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கிரந்தி நாயகம் மூலிகையின் அற்புத மருத்துவ பயன்கள் !!

கிரந்தி நாயகத்தின் வேறு பெயர்கள் சிலந்தி நாயகம், கிரந்தி நாயகன், நாயன். இதில் இலை மட்டுமே பயன் உள்ளது.


சுவை கசப்புத் தன்மை உடையது. மருந்தாக உட்கொள்ளும் பொழுது உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும்.
 
இதன் இலைகள் நீள் வட்ட வடிவில் காணப்படும். பூக்கள் சிறியதாகவும், காம்பு நீண்டு நீள நிறத்திலும் இருக்கும். நன்றாக காய்ந்த விதைகள் தண்ணீர் பட்டவுடன் வெடிக்கும் தன்மையுடையது. இதில் உள்ள இரண்டு வகையில் வெள்ளை நிறம் சிறப்புடையது.
 
கிரந்தி நாயகம் நுண் புழுக்களைக் கொள்ளக்கூடிய கிருமிநாசினியாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இம்மூலிகை சீதளம், கிரந்தி, பாம்பு, விஷம், கண் நோய், உட்புண்கள், சொரி, சிரங்கு, முதலியவை தீரும்.
 
வெட்டுக்காயங்களுக்கும் கிரந்தி நாயகத்தின் இலையை மைப்போல் அரைத்து பற்றிட விரைவில் குணமாகும். புண்களின் கிருமிகளை நெருங்க விடாது. பற்றிடும்போது எரிச்சல் உண்டாகும்.
 
இலையை நன்கு அரைத்து ஒரு கொட்டை பாக்கு அளவு எடுத்து பசுவின் வெண்ணெய்யுடன் கலந்து காலை மாலை இருவேளையாக உட்கொள்ள மேற்குறிப்பிட்ட நோய்கள் யாவும் தீரும். அக்கி புண்களில் தடவ குணமுண்டாகும்.