1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

க்ரீன் டீயில் துளசி இலைகளை சேர்த்து குடிப்பதால் என்ன நன்மைகள்...?

க்ரீன் டீயுடன் துளசி இலைகளை சேர்த்து குடித்தால், மன அழுத்தத்தைத் தூண்டும் ஹார்மோனான கார்டிசோல் கட்டுப்படுத்தப்பட்டு, உடலும் ரிலாக்ஸாக இருக்கும்.

க்ரீன் டீயுடன் துளசி இலைகளை சேர்த்து குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கும் செயல்முறை வேகமாக்கப்பட்டு, உடல் எடை அதிவேகமாக குறையும்.
 
துளசி மற்றும் க்ரீன் டீயில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-கார்சினோஜெனிக் தன்மை உள்ளதால், இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். குறிப்பாக இந்த டீ வாய் மற்றும் மார்பக புற்றுநோயை குணமாக்க பெரிதும் உதவி புரியும்.
 
சளி, இருமல் இருக்கும் போது துளசி டீ போட்டுக் குடிப்போம். அதிலும் க்ரீன் டீயுடன் துளசியைப் போட்டு குடித்தால், ஆஸ்துமா, மார்புச் சளி போன்றவை குணமாகும். மேலும் இந்த டீயைக் குடித்தால், சுவாசப் பாதையில் உள்ள வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுக்களும் எளிதில் அகலும்.
 
துளசியில் மக்னீசியம் ஏராளமாக இருப்பதனால் இதனை க்ரீன் டீயுடன் சேர்த்து குடிக்கும் போது, இரத்த நாளங்கள் விரிவடைந்து, இரத்த ஓட்டம் சீராகி, இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, இரத்த அழுத்தம் சீராகி, இதய பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
 
துளசியில் உள்ள வைட்டமின் ஏ, பார்வை கோளாறுகளை சரிசெய்யும். எனவே பார்வை பிரச்சனைகள் இருப்பவர்கள், துளசி க்ரீன் டீயைக் குடித்தால், பார்வை கோளாறுகளை சரிசெய்யலாம்.