1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சிறுநீரகத்தில் கல் உண்டாகாமல் பாதுகாக்கும் யானை நெருஞ்சில் !!

சாதாரணமாக உடலில் முகம், கை, முழங்கால் மற்றும் மூட்டுகளில் நீர் தேங்கி வீங்கி காணப்படும். இன்னும் சிலருக்கு உடல் முழுவதும் நீர் தேங்கி வீக்கமாக உடல் எடை அதிகரித்தது போல் இருப்பார்கள். 

இந்த வகையான நோய்க்கு நீர்க் கோவை அல்லது நீர்கட்டு எனப்படும். இதற்கு இத்தாவரத்தின் இலை மற்றும் வேர் பகுதியை சேகரித்து சுத்தம் செய்து 200 மில்லி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 50 மில்லியாக சுண்ட வைத்து குடித்துவர நீர் இறங்கி வீக்கம் குறையும்.
 
யானை நெருஞ்சில் இலையை அரைத்து ஆறாத புண்களுக்கு பற்று போட்டு வர விரைவில் குணமாகும். ஒவ்வொரு முறையும் பற்று போடும்முன் புண்களை உப்பு சேர்த்த நீரில் கழுவி பின் பற்று போடுவது அவசியம். இது புண்களின் மேல் கிருமிகள் படராமல் இருக்க உதவி செய்கிறது.
 
சிறுநீரக பையில் சதை வளர்ந்து வந்து மூத்திரம் வெளியாகும். குழாயை அடைத்து சிறுநீரக பையில் வீக்கத்தையும் வலியையும் உண்டாக்கும். இதற்கு தீர்வாக முன் சொன்ன அளவு தண்ணீரில் கசாயம் வைத்து கொடுக்க சதை வளர்ச்சி குன்றி சிரமம் இன்றி சிறுநீர் வெளியாகும்.
 
கல் அடைப்பு தீர இதன் வேர் சிறு நெருஞ்சில் வேர், சிறுபீளை சமூலம் சேர்த்து 300 மில்லி தண்ணீரில் கசாயம் வைத்து 1000 மில்லியாக சுண்ட வைத்து கொடுக்க சிறுநீரகத்தில் தங்கியுள்ள அனைத்து கற்களும் கரைந்து சிறுநீர் வழியாக சிரமம் இன்றி வெளியாகும். சிறுநீரக அடைப்பு இல்லாதவர்களும் மாதம் இரண்டு முறை குடிக்க சிறுநீரகத்தில் கல் உண்டாகாமல் பாதுகாக்கும்.