1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 30 நவம்பர் 2021 (00:18 IST)

ஆவாரம் பூவின் மருத்துவ பயன்கள்

பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும் பயன் படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல் வரட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும்.
 
ஆவாரையின் பஞ்சாங்க (வேர், இலை, பட்டை, பூ, காய்) சூரணம் 10 கிராம் வீதம் காலை, மதியம், மாலை வெந்நீருடன் கொள்ள பிரமேகம், மதுமேகம், மித்தாகம், மிகுபசி, உடல் மெலிவு, உடல் எரிச்சல், உடல் முழுதும் வேதனை, பலக்குறைவு, மயக்கம், மூச்சுத் திணறல், ஆகியவை தீரும். 45, 90, 135 நாட்கள் சாப்பிட வேண்டும்.
 
ஆவாரம் பூவுடன் ஊற வைத்த பாசிப்பயறு சேர்த்து அரைத்து குளித்தால், நமைச்சல், துர்நாற்றம் நீங்கும். உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள், ஆவாரம் பூ கசாயத்தை தவறாமல் குடித்து வந்தால், உடல் குளுமை அடையும்.
 
ஆவாரம் பூவை ஊறவைத்து, குடிநீர் தயாரித்து அருந்தினால் நாவறட்சி நீங்கும். கண் எரிச்சல் நீங்கும். உடல் சூட்டினால் கண் சிவந்து விடும். அவர்கள் ஆவாரம் பூவை உலர்த்திப் பொடித்து, நீர் விட்டு அரைத்து குழப்பி, படுக்கும் முன் கண் புருவத்தின் மீது பற்றுப் போட்டால் சிவப்பு நிறம் மாறும்.
 
ஆவரம் பட்டை, கஸ்தூரி மஞ்சள், ஒரு மிளகாய், சிறிது சாம்பராணி, நல்லெண்ணையுடன் காய்ச்சி, தலைக்கு குளித்து வர மதுமேகம் உடையவருக்கு காணும் தோல் வெடிப்பு, வறட்டசி, எரிச்சில் குணமாகும்.
 
ஆவாரம்பூக்களையும், கொழுந்தையும் சேர்த்து வெயிலில் காயவைத்து தூள் செய்து, அதில் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கஷாயம் இறக்கி பால் சேர்த்து பருகி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படு