1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. The best watermelon to eat everyday in summer !!

கோடை காலத்தில் தினமும் சாப்பிட உகந்த தர்பூசணி !!

கோடை காலம்
இரத்த நாளங்களில் உள்ள அழுக்குகளை நீக்கவும் இந்த தர்பூசணி உதவுகிறது. பிபி உள்ளவர்கள் தாராளமாக இந்த தர்பூசணியை சாப்பிட்டு வரலாம் பிபி படிப்படியாக குறையும்.


மற்ற பழக்களில் இல்லாத பைட்டோ நியூட்ரியன் சத்துக்கள் இந்த பழத்தில் இருப்பதினால் உடலின் ஆரோக்கியத்தை உயர்த்தி சுறுசுறுப்பாக உடலை வைக்கிறது.

தர்பூசணியை கோடை காலத்தில் தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குறது. சிட்ருலின் எனும் புரதச்சத்து இதில் இருப்பதால் இது உடலில் உள்ள இரத்த நாளங்களை விரிவடைய செய்கிறது இது இருதய கோளாறுகளையும் சரிசெய்கிறது.

தர்பூசணியை ஆண்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண் உறுப்புகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இந்த பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை போக்கும் வல்லமை கொண்டது.

தர்பூசணியில் லைக்கோபீன் எனும் புரத சத்துக்கள் இருப்பதால் எலும்புகளை வலுவடைய செய்து எலும்பு சம்பந்தமான நோய்களில் இருந்து விடுபடவும் தர்பூசணி நமக்கு உதவுகிறது.

தர்பூசணியில் அதிக அளவு நீர் தான் இருக்கிறது கலோரியானது குறைவாக தான் இருக்கிறது எனவே இது எடையை குறைக்க உதவுகிறது. தர்பூசணி தலைமுடி மற்றும் சருமத்தை அழகாக்கும்.

ஒருசிலருக்கு வைட்டமின் சி குறைபாட்டால் ஆஸ்துமா வருகிறது எனவே தர்பூசணியில் வைட்டமின் சி அதிக அளவில் இருப்பதால் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் குணமாகும்.
அடுத்த கட்டுரையில்
அன்றாட உணவில் சின்ன வெங்காயம் சேர்த்துக்கொள்வதால் இத்தனை நன்மைகளா...!!