செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (16:17 IST)

தர்பூசணி பழத்தின் விதையில் என்ன சத்துக்கள் உள்ளது...?

Watermelon seeds
தர்பூசணி விதையில் சிங்க் சத்துக்கள் அதிகம் உள்ளது. இது ஆண்களின் விந்தணுக்களை அதிகம் உருவாக்குகிறது.   


தர்பூசணி விதைகளை காய வைத்து அதை வறுத்து சற்று தேன் கலந்து சாப்பிட்டால் ஆண்களுக்கு விந்தணுக்களை அதிகரிப்பதோடு பாலியல் சம்பந்தமான பிரச்சனைகளை இது சரிசெய்ய உதவுகிறது.

தர்பூசணி பழத்தின் விதையில் மோனோ அன்சாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் ஃபேட்டிக் அமிலங்கள் நிறைந்துள்ளன. இது மாரடைப்பு வருவதற்கான காரணங்களை குறைகின்றது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.

தர்பூசணி விதைகளில் இரும்பு சத்துக்கள் அதிகம் உள்ளதால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அதிகரித்து இரத்தத்தை நன்கு சுத்தப்படுத்துகிறது.

உடல் சோர்வு பிரச்சனைகளுக்கு தர்பூசணி பழத்தின் விதை நல்ல பயனை தருகிறது.

பூசணி பழத்தின் விதையில் அமினோ ஆசிட்டுகள் அதிகம் உள்ளது. இது ரத்து ஓட்டங்களுக்கு பெரிதளவில் உதவி செய்கின்றது. வீக்கங்கள் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது.