1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 20 ஏப்ரல் 2022 (18:07 IST)

உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்து காணப்படும் கொய்யாப்பழம் !!

Guava Fruit
கொய்யா பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள்  நிறைந்துள்ளன.


சருமத்துக்கு மிகவும் சிறந்த பழமாக கொய்யா விளங்குகிறது. முகத்திற்கு பொலிவை தருவதுடன் தோல் வறட்சியையும் நீக்கும். தோல் சுருக்கத்தைக்  குறைக்கும். பளபளப்புடன் கூடிய இளமைத் தோற்றத்தைத் தருகிறது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க கொய்யா பழம் பயன்படுகிறது.  தைராய்டினால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய கொய்யா பழம் பயன்படுகிறது.

தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Guava

கொய்யா பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும். கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துகள் உள்ளன. இதனால் தோலை நீக்கிச் சாப்பிடக் கூடாது.

வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுப்பெறும். ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்துகிறது. இரத்தத்தில் இருக்கும் உடலுக்கு கேடு விளைவிக்கும் நச்சுகளை அகற்றி ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.