கோடை பானம்: வீட்டியே போடலாம் ஜிஞ்சர் மோர் & கிர்ணி ஜூஸ்!!
கோடைக்கு இதமாக வீட்டிலேயே கிர்ணி ஜூஸ், ஜிஞ்சர் மோர் எவ்வாறு செய்வது என்பதைப் பார்ப்போம்...
1. ஜிஞ்சர் மோர்:
தேவையானவை:
மோர் - 500 மில்லி
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - சிறு துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். மோருடன் அரைத்த விழுது, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்துமல்லியைப் போட்டுக் கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால் ஐஸ் க்யூப் சேர்த்துக் கொள்ளலாம்.
2. கிர்ணி ஜூஸ்:
தேவையானவை:
கிர்ணி பழம் - 1
பால் - 500 மில்லி
சர்க்கரை - 100 கிராம்
செய்முறை:
கிர்ணி பழத்தை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். காய்ச்சி, ஆற வைத்த பாலை சேர்த்துக் கலக்கவும். பரிமாறும் முன் ஐஸ் க்யூப் சேர்த்துப் பரிமாறலாம்.
குறிப்பு: கிர்ணிப் பழத் துண்டுகளுடன் வெல்லம் சேர்த்தும் சாப்பிடலாம். உடல் சூட்டைத் தணிக்கும்.