வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : வியாழன், 7 ஏப்ரல் 2022 (12:13 IST)

ஜீரண பிரச்சினைகளை போக்கி நலம் தரும் பன்னீர் திராட்சை !!

Paneer Grapes
குடல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தவும். இது சம்பந்தப்பட்ட தொல்லைகளைப் போக்கும் நன்கு பசி எடுக்கவும். சிறுநீரக கோளாறுகளைப் போக்கவும். திராட்சைப் பழம் நல்ல மருந்தாக பயன்படுகிறது.


புற்றுநோயை வரவிடாமல் தடுத்து நிறுத்தும் ஆற்றலையும் இந்த பழம் பெற்று சிறப்படைகிறது. தொன்டை சம்மந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும். முதுமையை தவிர்த்து நோய் எதிர்ப்பாற்றலை உண்டு பண்ணவும், ஜீரண சக்தியை உண்டு பண்ணவும் பன்னீர் திராட்சை பழம் நல்ல மருந்தாகிறது.

திராட்சை பழம் கிடைக்கும் காலத்தில் தினந்தோறும் இப்பழத்தை உண்டு வரவேண்டும். இவ்விதம் உட்கொண்டு வந்தால் உடல் நலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இன்றி வாழலாம்.

மலச்சிக்கலைப் போக்கவும் இது கை கண்ட மருந்தாகும். எனவே திராட்சைப் பழத்தை உண்டு மலச்சிக்கலையும் போக்கிக் கொள்ளலாம்.

கருத்தரிக்கும் பெண்கள் 6 மாதத்தில் இருந்தே தினசரி குறைந்தது 20 திராட்சைப்பழம் ஆவது உட்கொள்ளவேண்டும். இவ்விதமாக தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் பிரசவத்தின் போது வலி குறைவதுடன் சுகமான பிரசவம் நடைபெறும்.

பன்னீர் திராட்சை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான கோளாறுகள் குணமாவதுடன் கண் பார்வை தெளிவுபெறும்.