புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இத்தனை நோய்களுக்கு நிவாரணம் தருகிறாதா கீழாநெல்லி....?

சித்த மருத்துவ முறையில் கீழாநெல்லி வேரை வேப்பிலையுடன் கலந்து காயவைத்து தூளாக்கி கருப்பை தொடர்பான பிரச்சனைகள்  குணமாகவும் பெண் மலட்டுத் தன்மையை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும் பயன்படுகின்றன.
கீழா நெல்லி வேரை அரைத்து பசும்பாலுடன் கலந்து, காலை, மாலை 3 நாட்கள் கொடுக்க உடல் சூடு குறைந்து குளிர்ச்சி பெறும். விஷக்  கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களை விலக்குவதற்கான மருந்தாகவும் இதனைப் பயன்படுத்தலாம்.
 
கீழா நெல்லி இலையை, எலுமிச்சம் பழ அளவு மென்று சாப்பிட தேல் கொட்டிய விஷம் முறியும்.
 
எலிக்கடி விஷம் குணமாக ஒரு பிடி கீழாநெல்லி இலைகளை எடுத்து 100 மிலி நல்லெண்ணெய்யில் இட்டுக் காய்ச்சிய எண்ணெய்யை கடி  வாயில் தடவ வேண்டும். காய்ச்சி வறுத்த இலையை உட்கொள்ளவேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் காலை வேளைகளில் வெறும் வயிற்றில்  இவ்வாறு சாப்பிடவேண்டும்.
 
கீழாநெல்லி இலையை நசுக்கி, அதனை இரண்டு டம்ளர் நீரில் இட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி, காலை, மாலை இரு வேளைகளும்  குடிக்க வெள்ளைபடுதல் தீரும்.
 
வயிற்றுப் புண் குணமாக ஒரு கைப்பிடி அளவு கீழா நெல்லி இலையை அரைத்து, 1 டம்ளர் மோரில் கரைத்து காலையில் குடித்து வரவேண்டும். தேவையான அளவு கீழா நெல்லி இலைகளை அரைத்து காயத்தின் மீது வைத்துக் கட்ட காயங்கள் குணமாகும்.