தேங்காயை பச்சையாக மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!!

Sasikala|
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு இயற்கை உணவாக இருக்கும் தேங்காயை தினமும் சாப்பிடுவதால் நமக்கு ஏராளமான மருத்துவ நன்மைகள்  உண்டு.
தேங்காயில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. தினமும் காலையில் சிறிதலவு புதிய பச்சை தேங்காயை மென்று சாப்பிடுவதால் உடலுக்கு கால்சியம் மற்றுல் பாஸ்பரஸ் கிடைப்பதோடு, எலும்புகளையும் வலுப்படுத்தும்.
 
தினமும் சிறிது தேங்காயை மென்று சாப்பிடுபவர்களுக்கு தேங்காயில் இருக்கும் கொழுப்பு மற்றும் எண்ணெய் பொருட்கள் ரத்தத்தில் கலந்து, தோலின் பளபளப்பு தன்மையை கூட்டுகிறது.
 
தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. இவை முடி உதிர்வது, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள்  ஏற்படாமல் தடுக்கும். 
 
தேங்காயில் இருக்கும் மோனோலாரின் மட்டும் லாரிக் அமிலங்கள் நமது ரத்தத்தில் கலந்து நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு உடலில் பரவி இருக்கின்ற நுண்கிருமிகளை அழித்து, உடலை தூய்மை செய்வதோடு, மேற்கொண்டு புதிய நுண் கிருமிகள் தொற்று  ஏற்படாதவாறு காக்கிறது.
 
தேங்காயை பச்சையாகவே மென்று சாப்பிடுவதால் இந்த நார்ச்சத்து முழுமையாக நமக்குக் கிடைக்கிறது. மேலும் உடலில் செரிமானத்திற்கு தேவையான என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :