மழைக்காலத்தில் வரும் சேற்றுப்புண்ணை போக்க இயற்கை மருத்துவ குறிப்புகள்!!

Sasikala|
மழைக்காலத்தின் பொது, சேறு மற்றும் சகதிகளிலும் ஈரப்பாங்கான மண்ணில் அதிக நேரம் செருப்பணியாமல் வெறும் காலுடன் நிற்பதாலும்  வரக்கூடும்.
வேப்பெண்ணெய்யும், மஞ்சள் தலா ஒரு தேக்கரண்டி எடுத்து கலந்து சிறு டீயில் வைத்து நன்கு கொதிக்கவிட்டு கைபொறுக்கும் சூட்டுக்கு மேலான சூட்டில் சேற்றுப்புண் உள்ள இடத்தில் போட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.
 
ஒரு கைப்பிடி அளவு  வேப்பிலையுடன் நீர் சேர்த்து, அதை கொதிக்க வைத்த பின் அந்த நீரைக்கொண்டும் பாதங்களை கழுவலாம்.
 
வெந்நீரில் சிறிதளவு உப்பு போட்டோ,  எலுமிச்சை பழச் சாறு கலந்தோ கால்களை கழுவலாம். 
 
தேங்காய் எண்ணெயுடன் மஞ்சளைக் சேர்த்து, குளிப்பதற்கு முன்பு, காலில் தடவிக் குளித்தால், சேற்றுப்புண் வராது.
 
மருதாணி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசலாம்.  மஞ்சளை மட்டும் நீர்விட்டு அரைத்துப் பூசலாம். 
 
கீழாநெல்லி இலையை மஞ்சள் சேர்த்து அரைத்து சேற்றுப்புண் உள்ள இடத்தில் ஐந்து நாட்கள் இரவில் தடவிவர சேற்றுப் புண் ஆறிவிடும்.


இதில் மேலும் படிக்கவும் :