1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Yedurappa ready to resign his cm post

சொந்த கட்சியினர்களே அளித்த ஊழல் புகார்: முதல்வர் பதவியில் இருந்து விலக முடிவா?

எடியூரப்பா
சொந்த கட்சியினரே ஊழல் புகார் அளித்துள்ளதால் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது முதல்வர் பதவியில் இருந்து விலக தயார் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கர்நாடக மாநிலத்தில் அவ்வப்போது அரசியல் குழப்பம் ஏற்படும் என்பது தெரிந்ததே. கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் குமாரசாமி முதல்வராக பதவியேற்ற நிலையில் ஒரு சில மாதங்களில் அவரது அமைச்சரவை கவிழந்தது.
 
இதனை அடுத்து எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்றது. இந்த நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் சிலர் எடியூரப்பா மீது ஊழல் புகார் எழுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முதலமைச்சர் எடியூரப்பா பரபரப்பாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். சொந்த கட்சி எம்எல்ஏக்களே ஊழல் புகார் எழுப்பியது மன வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது என்றும் பாஜக தலைமை கேட்டுக் கொண்டால் கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து விலகும் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: முதல்வரை அடுத்து பிரதமருக்கு ஓபிஎஸ் கடிதம்!