ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

ஊரடங்கில் தளர்வுகள் எப்போது? கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. ஆனால் கடந்த சில நாட்களாக பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து தமிழகம் டெல்லி உள்பட ஒருசில மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கில் தளர்வுகள் எப்போது அறிவிக்கப்படும் என்பது குறித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு 5 சதவீதம் அளவுக்கு குறைந்தால் மட்டுமே ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் 
 
மேலும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு நிதி தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த நிதித்தொகுப்பு பயனாளிகளுக்கு அளிக்கும் பணி தொடங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு 5 சதவீதம் அளவு குறைந்தால் மட்டுமே ஊரடங்கில் தளர்வுகள் என்ற முதல்வரின் அறிவிப்பு மாநில மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.