1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 5 ஜூன் 2021 (12:50 IST)

நடந்துச்சென்று பொருட்கள் வாங்குங்கள் - பொதுமக்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்ததால் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு 7ம் தேதியுடன் முடியும் நிலையில் அடுத்த 14ம் தேதி வரை கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத மாவட்டங்களுக்கு மட்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
அதன்படி, கொரோனா பாதிப்புகள் அதிகமுள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் குறித்து அறிவித்துள்ள முதலமைச்சர், பொதுமக்கள் தங்கள் வீடுகளின் அருகாமையில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை வாங்க வேண்டும் என கூறியுள்ளார். 
 
அதோடு பொருட்களை வாங்க, பைக், கார்களில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.  அவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வருவதை முற்றாகத் தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் கூட்டமாக கூடுவதை முற்றிலும் தவிர்க்கவும் என கேட்டுக்கொண்டுள்ளார்.