வொர்க் ஃப்ரம் ஹோம் வசதியை நிறுத்தியதால் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்த ஊழியர்கள்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் ஊழியர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் திடீரென அலுவலகத்திற்கு வரச் சொன்னதால் ஒட்டுமொத்தமாக ஊழியர்கள் ராஜினாமா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒயிட் ஹேட். இந்த நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் ஊழியர்களை பணியில் அமர்த்தியது.
இந்த நிலையில் தற்போது திடீரென ஊழியர்கள் அலுவலகம் வர வேண்டும் என்று ஈமெயில் அனுப்பியது. இதனை அடுத்து கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் சுமார் 800 ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக அலுவலகத்தில் வந்து பணிபுரிய முடியாது என்று கூறி ராஜினாமா செய்துள்ளனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.