வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva

1000 டுவிட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டம்: மேலும் சில அதிரடி

elan twitter
டுவிட்டரில் பணிபுரியும் ஆயிரம் ஊழியர்களை முதல் கட்டமாக பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கினார்.
 
 இதனையடுத்து அவர் டுவிட்டரில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது 
 
முதல்கட்டமாக டுவிட்டர் நிறுவனத்திற்கான செலவுகளை குறைக்கவும் வருமானத்தை அதிகரிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார் 
 
இதற்காக ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது