செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 9 மே 2022 (16:42 IST)

இலங்கையில் முற்றும் நெருக்கடி: பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ராஜபக்சே

அண்டை நாடான இலங்கையில் பொருளாதார  நெருக்கடி இருந்து வந்த நிலையில், மகிந்த ராஜபக்ஷே இன்று ரானினாமா செய்துள்ளார்.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் பொருளாதார   நெருக்கடி  ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் சிரமத்தில் உள்ளனர்.

ஒரு கிலோ ஆப்பிள் ரூ.1000, ஆகவும், பேரிக்காய் ரு.1500 ஆகவும் சந்தையில் விற்கப்படுகிறது.

பணக்கார்களை தவிர ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும்  பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.எரிபொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது.

இதனால் அரசின் மீது மக்களும் வியாபாரிகளும் கோபத்தில் உள்ளனர். மேலும் சீனாவிற்கு அனைத்தையும் இலங்கை அரசு விற்றுவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இலங்கை அரசு  நிதி உதவி கேட்டிருந்த  நிலையில், இந்திய அரசு ரூ.7,500 கோடிக்கு மேல் கடனுதவி செய்தது. சமீபத்தில் தமிழக அரசு இலங்கை மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களும் திமும சார்பில் பண உதவி வழங்கப்பட்டது.

இ ந்  நிலையில், இலங்கை அரசுக்கு எதிராகவும் ராஜபக்ஷே பதவி விலகக் கோரியோயும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று, ராஜபக்ஷே ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில்,  23 பேர் காயம் அடைந்துள்ளனர்.

நெருக்கடி முற்றியுள்ள நிலையில், 2019  ஆம் வருடம் முதல்  இலங்கை பிரதமர் பதவியில் இருந்து, மகிந்த ராஜபக்க்ஷ ராஜினாமா செய்துள்ளதாக அங்குள்ள  ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.