1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 மே 2022 (12:25 IST)

அடுத்தடுத்து பிரச்சனைகள்: ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி திடீர் ராஜினாமா!

OLA Scooter
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அவ்வப்போது திடீர் திடீரென தீப்பிடித்து எரிவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரி திடீரென ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில மாதங்களாக ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் களை பொதுமக்கள் அதிக அளவு வாங்கி வரும் நிலையில் திடீர் திடீரென நாடு முழுவதும் பேட்டரி வெடித்து தீ பிடிக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன 
 
இந்த நிலையில் ஏற்கனவே எலக்ட்ரிக் மோட்டார் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் ஒரு சில முக்கிய அதிகாரிகள் விலகியுள்ள நிலையில் தற்போது முதன்மை மார்க்கெட்டிங் அதிகாரி துபே தருண் என்பவரும் ராஜினாமா செய்துள்ளார்
 
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது தொடர்ச்சியாக எழுந்து வரும் புகார்கள் காரணமாக அடுத்தடுத்து அந்நிறுவனத்தில் உள்ள முக்கிய அதிகாரிகள் ராஜினாமா செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது