வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 6 மார்ச் 2024 (18:22 IST)

மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் கமிட்டியின் அங்கீகாரத்தை ரத்து செய்த உத்தரவு வாபஸ்!

central government
மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு   புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இந்திய மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் சங்கத்தின் செயற்குழுவின் பதவிக்காலம் நிறைவடைந்தது. புதிய உஊர்ப்பினர்களுக்கான  தேர்தல் நடத்துவதில் கால தாமதம் ஏற்பட்டது.  எனவே இந்திய மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் சங்கத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம்  கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.
 
இதையடுத்து, ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் தேர்தல்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில்,  புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் சூழல்  உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
 
டெல்லியில் மாற்றுத்திறனாளிகளுக்காக  துப்பாக்கிசுடுதல் உலகக் கோப்பை நடைபெறவிருக்கும் நிலையில்,  இந்திய மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் சங்கத்தின் அங்கீகரத்தை தற்காலிகமாக ரத்து செய்த உத்தரவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.