வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 29 பிப்ரவரி 2024 (19:45 IST)

அரசியல் கட்சி தொடங்கும் ராகவா லாரன்ஸ்?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ராகவா லாரன்ஸ். இவர்  நடன இயக்குனராக இருந்து, நடிகராக உயர்ந்தார்.
 
அதன்பின்னர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகக் கலைஞராக செயல்படும் அவர், மாற்றுத்திறனாளிகள், ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறார்.
 
சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யாவுடன் இணைந்து இவர் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் சூப்பர் ஹிட் வெற்றிபெற்றது.
 
தற்போது, செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ள அடுத்த படத்திற்காக கதை விவாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
 
இந்த நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் தன் கட்சி நிர்வாகிகள்,ரசிகர்களை சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இந்த நிலையில் விழுப்புரத்தில் தன் ரசிகர்களை சந்தித்து, சுமார் 2 ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்து கொடுத்து, ஒவ்வொரு ரசிகர்களுடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து இசிஆரில் ரசிகர்களை சந்திக்கவுள்ளார்.
 
இது அரசியல் ஈடுபடுவதற்கான முன்னோட்டம் என தகவலும் வெளியாகிறது.
 
மேலும் லாரன்ஸ் தன் ரசிகர்களைத் தேடிச் சென்றது மாதிரி சமீபத்தில் தூத்துகுடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்த பிறகு மீண்டும் அதே பகுதிக்குச் சென்ற அவர், அப்பகுதி மக்களுக்கு  ஹெல்மெட் இலவசமாக கொடுத்து, விழிப்புணர்வு பிரசாரம் செய்ததுடன், தன் அந்தகன் படத்திற்காக புரமோசனையும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.