ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 12 ஜனவரி 2024 (18:09 IST)

தமிழ்நாட்டு வீரர்களுக்கு மத்திய அரசு மறுத்த நிதி- தமிழக அரசு வழங்கியது

udhayanithi stalin
பிரேசில்  நாட்டில் நடக்கும் செவி மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு தொடரில் கலந்துகொள்ள தமிழ்நாட்டு வீரர்களுக்கு நிதி வழங்க மத்திய அரசின் விளையாட்டு ஆணையம் மறுப்பு தெரிவித்த தாக தகவல் வெளியான நிலையில், தமிழ்நாடு  அரசின் சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.25 லட்சத்தை அவர்களுக்கு வழங்கினார்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:

‘’பிரேசிலில் வரும் 14 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை செவி மாற்றுத்திறனாளிகளுக்கான First World Deaf Youth Games நடைபெறவுள்ளது.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பிகள் ஜி.தமிழ்ச்செல்வன் - சுதர்சன் மற்றும் தங்கைகள் வர்சினி - பிரியங்கா - சுபஸ்ரீ ஆகியோர்  தடகளப் பிரிவில் பங்கேற்கவுள்ளனர்.

இவர்களின் விமானப்பயணம் - தங்குமிடம் - விசா உள்ளிட்ட செலவினங்களுக்காக, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து தலா ரூ.5 லட்சம் வீதம், ரூ.25 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினோம்.

இந்த சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமைத் தேடித்தர நம் மாற்றுத்திறன் வீரர்  - வீராங்கனையரை வாழ்த்தினோம்’’என்று தெரிவித்துள்ளார்.