ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (20:05 IST)

பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் வழங்கப்படும் பதக்கங்கள் இதில் செய்ததா?

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டி மற்றும் பாராலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள   நிலையில், இதில் வழங்கவுள்ள பதக்கங்கள் ஈபெல் டவர் கட்டுமானத்தில் பயன்படுதப்பட்ட அசல்  இரும்பினால் உருவாக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. 

இந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டி மற்றும் பாராலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது.
 
இதற்காக அனைத்து நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பயிற்சி மேற்கொண்டு ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கு தயாராகி வருகின்றனர்.
 
இந்த  நிலையில்,  இந்தாண்டு பாரிஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் வழங்கப்படும் பதக்கங்கள், ஈபெல் டவர் கட்டுமானத்தில் பயன்படுதப்பட்ட அசல்  இரும்பினால் உருவாக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.