1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Wife kill her husband for racist trolls

கருப்பா இருக்க.. கலாய்த்த கணவன்! கடுப்பாகி கொலை செய்த மனைவி!

Chattisgarh
சத்தீஸ்கரில் மனைவி கருப்பாக இருப்பதாக தொடர்ந்து கிண்டல் செய்த கணவனை மனைவில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள அம்லேஷ்வர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் சோன்வானி. இவரது மனைவி சங்கீதா சோன்வானி. சங்கீதா கருப்பாக இருப்பதால் அவருடன் அடிக்கடி ஆனந்த் சண்டை போட்டு வந்ததாக தெரிகிறது.

மேலும் அடிக்கடி அவர் கருப்பாய் இருப்பதை குறிப்பிட்டு கிண்டல் செய்தும் வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சங்கீதா கோடாரியால் ஆனந்தை வெட்டி கொன்றுள்ளார். பின்னர் அடுத்த நால் தனது கணவரை யாரோ சிலர் கொன்றுவிட்டதாக ஊரார் முன்னிலையில் நடித்துள்ளார்.

ஆனால் போலீஸ் விசாரணையின்போது முன்னுக்கு பின் உளறிய சங்கீதா பின்னர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சங்கீதாவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
சென்னையில் பல இடங்களில் கனமழை: 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என தகவல்!