திமுக பிரமுகரை கத்தியால் குத்தி கொலை செய்த பெண் ரெளடி: சென்னையில் பரபரப்பு!
சென்னையை சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவரை பெண் ரவுடி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
சென்னை தாம்பரம் என்ற பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற திமுக பிரமுகருக்கும் அதே பகுதியை சேர்ந்த லோகம்மாள் என்ற பெண் ரெளடிக்கும் அடிக்கடி தகராறு நடந்ததாக கூறப்படுகிறது
அந்த வகையில் நேற்று மாலை மீண்டும் வழக்கம்போல் இருவருக்கும் தகராறு நடந்த நிலையில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திமுக பிரமுகர் சதீஷை, லோகம்மாள் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சதீஷ் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சதீஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் பெண் ரவுடி லோகம்மாள் என்பவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.