வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 14 அக்டோபர் 2017 (17:59 IST)

நான் ஏன் பிரதமராக தேர்வு செய்யப்படவில்லை: மனம் திறக்கும் பிரணாப் முகர்ஜி

கடந்த 2004ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றவுடன் சோனியாகாந்தி பிரதமர் ஆக முடியாது என்ற சூழ்நிலை வந்தபோது பிரதமர் பதவிக்கு இரண்டு பேர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. ஒருவர் மன்மோகன் சிங், இன்னொரு பிரணாப் முகர்ஜி. ஆனால் சோனியா காந்தியின் ஆதரவு மன்மோகனுக்கு இருந்ததால் அவர் பிரதமர் ஆகிவிட்டார். இருப்பினும் பிரணாப் முகர்ஜிக்கு இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவி பின்னாளில் கிடைத்தது



 
 
இந்த நிலையில் பிரதமர் பதவி கிடைக்காதது ஏமாற்றமா? என்ற கேள்விக்கு பிரணாப் முகர்ஜி கூறிய பதில் இதுதான்: கடந்த 1996- முதல் 2012 வரை காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் எனக்கு நீண்ட நாள் நண்பர்  அவர் தான் பிரதமர் பதவிக்கு தகுதியான நபர். எனக்கு இந்தி தெரியாது. இந்தி தெரியாமல் இந்தியாவில் யாரும் பிரதமர் ஆக முடியாது. இந்தி தெரியவில்லை என்றால் பிரதமர் பதவி இல்லை என்று மறைந்த காமராஜர் கூறியுள்ளார். மன்மோகன் சிங் மீது சோனியா காந்தி நம்பிக்கை வைத்து இருந்தார். அவர் தான் அந்த பதவிக்கு சரியான தேர்வு என நானும் நன்கு உணர்ந்து இருக்கிறேன்.
 
இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினாலும் தான் பிரதமராக தேர்வு செய்யப்படவில்லையே என்ற மனக்குறை அவருக்கு இருந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறி வருகின்றன.