இந்தியா வளர்ச்சியில் மேலும் பின்வாங்கும்: உலக வங்கி தகவல்!!
பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி அமல் போன்றவற்றின் காரணமாக மேலும் இந்தியாவின் வளர்ச்சி சரியும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பன்னாட்டு நிதியம், உலக வங்கி ஆகியவையின் ஒரு வார ஆய்வு கூட்டம் வாஷிங்டனில் நடைபெற்றது. இதில், உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில், 2017 ஆம் ஆண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும். இது, 0.5 சதவீதம் குறைவானது.
2018 ஆம் ஆண்டு வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக இருக்கும். அதுவும் ஏற்கனவே எடுக்கப்பட்ட கணிப்பில் இருந்து 0.3 சதவீதம் குறைவானதாகும்.
இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.