1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 டிசம்பர் 2021 (20:55 IST)

தொழிலதிபர் அதானியை சந்தித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி!

தொழிலதிபர் அதானியை சந்தித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி!
பிரபல தொழிலதிபர் அதானி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பல அரசியல் தலைவர்களை சந்தித்து பாஜகவுக்கு எதிராக புதிய கூட்டணிக்கு ஆலோசனை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தொழிலதிபர் அதானி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்களை சந்தித்தார். மேற்குவங்க மாநிலத்தில் முதலீடு செய்வது குறித்து அவரிடம் ஆலோசனை செய்ததாகவும் கூறியுள்ளார்
 
மேலும் அடுத்த ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற உள்ள சர்வதேச தொழிலதிபர் மாநாட்டிலும் கலந்து கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்தார் மம்தா பானர்ஜி சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது