செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 17 நவம்பர் 2021 (14:02 IST)

வீடு தேடி வரும் ரேஷன் - மேற்கு வங்கத்தில் மம்தா துவக்கம்!

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேற்று துவரே ரேஷன் திட்டத்தை தொடங்கி வைத்தார். 
 
கடந்த மே மாதம் நடந்த மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார் என்பதும் அவரது கட்சி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனையடுத்து நடைபெற்ற பவானிபுர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். பின்னர் பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் மம்தா பானர்ஜி எம்எல்ஏவாக பதவியேற்றார். 
 
இவர் கடந்த செப்டம்பரில் 3,000 ரேஷன் பணியாளர்கள் மூலம் சிறிய அளவில் துவரே ரேஷன் திட்டத்தை செயல்படுத்தியது அம்மாநில அரசு. மக்கள் மத்தியில் இத்திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேற்று துவரே ரேஷன் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தால் 10 கோடிக்கும் அதிகமானோர் பயனடைவார்கள். நாட்டிலேயே இது ஒரு முன்னோடியான திட்டம் என தெரிவித்தார்.