1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 2 டிசம்பர் 2021 (18:59 IST)

ஷாருக்கானுக்கு திடீரென ஆதரவளித்த மம்தா பானர்ஜி!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திடீரென ஷாருக்கானுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தற்போது மும்பையில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதும் திரையுலக பிரபலங்கள் பலரை சந்தித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பாஜகவின் கொடூர ஆட்சியால் ஷாருக்கான் பாதிக்கப்பட்டு உள்ளார் என்றும் அதேபோல் பாலிவுட் திரையுலக பிரமுகர் மகேஷ்பட் அவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளார் என்றும் இதன் மூலம் பாஜகவின் கொடூர முகம் வெளியே தெரிந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் 
 
ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் சமீபத்தில் உல்லாசக் கப்பலில் போதை பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டிருந்த நிலையில் திடீரென ஷாருக்கானுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
வரும் பாராளுமன்ற தேர்தலில் ஷாருக்கானின் ஆதரவை பெறவே திடீரென மம்தா பானர்ஜி அவருக்கு ஆதரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது