பிரதமர் மோடியை சந்தித்த மம்தா பானர்ஜி: முக்கிய கோரிக்கை வைத்ததாக தகவல்!
பிரதமர் மோடியை மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் சந்தித்து முக்கிய கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
பிரதமர் மோடியும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் அவ்வபோது மோதிக் கொண்டு வருகின்றனர் என்பதும் பாஜகவை கடுமையாக விமர்சித்த முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன்னர் டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது மேற்கு வங்க மாநிலத்தில் பிஎஸ்எஸ் படையின் அதிகார வரம்பு அதிகரிக்கப்பட்டதை திரும்பப் பெற அவர் வலியுறுத்தியதாக தகவல்கள்
மேலும் பல முக்கிய கோரிக்கைகளை மம்தா பானர்ஜி பிரதமர் மோடியிடம் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது