1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Water opened from Iduki Dam

4 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணையில் தண்ணீர் திறப்பு: பீதியில் மக்கள்!

கேரள மாநிலம்
ஆசியாவின் உயரமான அணையாக கருதப்படும் இடுக்கி அணையில் இருந்து கனமழை காரணமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

 
தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக கேரளாவில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக கேரளாவில் புரட்டிப் போட்ட கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டது. ஆசியாவின் உயரமான அணையாக கருதப்படும் இடுக்கி அணையில் நீர் மட்டும் 2,403 அடியை எட்டியிருக்கிறது. 
 
இந்நிலையில் கேரள மாநிலம் இடுக்கி அணையில் இருந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணை வேகமாக நிரம்பும் நிலையில் உள்ளதால் முதற்கட்டமாக வினாடிக்கு 30,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
அதிமுக பொதுசெயலாளர் என்றே கடிதம் எழுதிய சசிக்கலா! – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!