நிரம்பியது பூண்டி ஏரி; மதியம் தண்ணீர் திறப்பு! – வெள்ள அபாய எச்சரிக்கை!
திருவள்ளூரில் பூண்டி ஏரியில் நீர் கொள்ளளவு அதிகரித்துள்ள நிலையில் இன்று திறக்கப்பட உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவள்ளூரில் உள்ள பூண்டி ஏரி நீர்வரத்து வேகமாக அதிகரித்துள்ளது.
இதனால் ஏரியிலிருந்து உபரிநீரை திறந்துவிட பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. இதனால் இன்று மதியம் 2 மணிக்கு முதற்கட்டமாக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால் ஏரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.