செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated: வியாழன், 29 டிசம்பர் 2022 (21:34 IST)

வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கொரொனா உறுதி!

corono
சீனாவில் இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு கொரொனா வைரஸ் தொற்று உலக நாடுகளுக்குப் பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த கொரொனாவில் உருமாறிய பிஎஃப் 7 வைரஸ் தற்போது   ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பரவி வருகிறது.

இந்த  நிலையில், இந்தியாவுக்கு வரும் வெளி நாட்டுப் பயணிகளில் சிலரிடம் மட்டும் ரேண்டம் பரிசோதனை செய்ய அறிவுறுத்தி வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 6 பேருக்கு கொரொனா தொற்று இருப்பதாக தகவல் வெளியான நிலைய்ய்ல், இன்று   வெளி நாடுகளில் இருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதில், துபாயில் இருந்து 2 பேருக்கும், மலேசியா, சீனாவில் இருந்த வந்த தலா ஒருவருக்கு இத்தொற்று உறுதியாகியுள்ளது.

இதுவரை தமிழகத்தில் மொத்தம் 10 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.