தொடர்புடைய செய்திகள்
- காசு கேட்டு மிரட்டிய கடத்தல்காரர்கள்; கண்டுகொள்ளாத உறவினர்கள்! – கடற்படை அதிகாரிக்கு நிகழ்ந்த சோகம்!
- இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக மேலும் 7 தடுப்பூசிகள்! – மத்திய அமைச்சர் தகவல்!
- எங்கேயும் போக மாட்டோம்.. அக்டோபர் வரை இங்கதான்! – டெல்லி விவசாயிகள் உறுதி!
- அரசு ஆணி அடித்த இடத்தில் மலர்களை வைத்த விவசாயிகள்!
- ஓ பொம்மலாட்டம் இப்படிதான் இருக்குமா? – இந்திய கிரிக்கெட் வீரர்களை கலாய்த்த மனோஜ் திவாரி!
உத்தர்கண்ட் பனிச்சரிவு; வெள்ளப்பெருக்கு! – 150 பேர் உயிரிழப்பு?
உத்தர்கண்ட் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவால் வெள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து 150க்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர்கண்ட் மாவட்டம் சமோலி மாவட்டத்தில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டதால் தௌளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆர்பரித்து வந்த வெள்ளம் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளை அடித்து சென்றுள்ளது. இந்த பேரிடர் சம்பவத்தால் 150 பேர் வரை மாயமாகியுள்ளதாகவும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு படை, ராணுவம் உள்ளிட்டவை சமோலி மாவட்டம் விரைந்துள்ளன. இந்நிலையில் மேலும் 4 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்த கோர சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
