காசு கேட்டு மிரட்டிய கடத்தல்காரர்கள்; கண்டுகொள்ளாத உறவினர்கள்! – கடற்படை அதிகாரிக்கு நிகழ்ந்த சோகம்!
தமிழகத்தில் கடற்படை அதிகாரியா பணிபுரிந்து வந்த நபரை மர்ம நபர்கள் கடத்தி சென்று எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் சூரஜ்குமார் துபே. தமிழகத்தில் ஐஎன்எஸ் கடற்படை அதிகாரியாக பணிபுரிந்து வந்த இவரை சில நாட்கள் முன்னதாக சென்னையிலிருந்து மர்ம கும்பல் ஒன்று கடத்தியாக கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவின் பால்கர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு அவரை கடத்தி சென்ற கும்பல் சூரஜ்குமாரின் குடும்பத்தினருக்கு போன் செய்து ரூ.10 லட்சம் தராவிட்டால் சூரஜ்குமாரை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர். ஆனால் அதை குடும்பத்தினர் போலி அழைப்பு என அலட்சியப்படுத்தியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கடத்தல்க்காரர்கள் சூரஜ்குமாரை உயிருடன் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் காட்டில் தேடுதல் பணியில் ஈடுபட்ட போலீஸார் பாதி எரிந்த நிலையில் சூரஜ்குமாரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் நேற்று முன் தினம் அனுமதிக்கப்பட்ட சூரஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் கடத்தல்க்காரர்களை கண்டுபிடிக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.