இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக மேலும் 7 தடுப்பூசிகள்! – மத்திய அமைச்சர் தகவல்!
இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு எதிராக 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் மேலும் 7 தடுப்பூசிகள் கண்டுபிடிப்பில் உள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் 1 கோடியை தாண்டியுள்ள நிலையில் அவசர கால மருந்தாக கோவாக்சின், கோவிஷீல்டு ஆகியவை அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மேலும் 7 தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவை பரிசோதனை அளவில் உள்ளதாகவும் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசிகளை வெளி சந்தைக்கு கொண்டு வரும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ள அவர் முன்கள பணியாளர்கள், வயதானவர்களுக்கு வழங்குவதே முதன்மை நோக்கம் என்றும், இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாட்டில் இதுபோன்று 7 தடுப்பூசிகளாவது இருப்பது பற்றாக்குறையை போக்க உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.