நீட் பயிற்சி மாணவியை 6 மாதமாக பூட்டி வைத்து பாலியல் வன்கொடுமை..2 ஆசிரியர்கள் கைது!
நீட் பயிற்சி பெற்று வரும் மாணவியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் என்ற நகரில் உள்ள மாணவியை 2 ஆசிரியர்கள் 6 மாதங்களாக பூட்டி வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது
தன்னை 6 மாதங்களாக அடிமை போல் வீட்டில் அடைத்து வைத்து வன்கொடுமை செய்ததாக சிறுமி குற்றம்சாட்டியுள்ளார். வேதியியல் ஆசிரியரும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார். கடந்த மாதம் உயிரியல் ஆசிரியர் நீட் பயிற்சி மையத்தில் மற்றொரு மாணவியிடம் அத்துமீறிய சிசிடிவி காட்சி வெளியானது. அந்த விவகாரத்தில் அவர் கைதாகி, ஜாமீனில் வெளிவந்தார். இதனையறிந்த சிறுமி, தற்போது துணிச்சலாக முன்வந்து புகார் அளித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் பார்ட்டி என ஏமாற்றி மாணவியை வீட்டுக்கு வரவழைத்த உயிரியல் ஆசிரியர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கூறியுள்ளார். மேலும் அதை வீடியோ எடுத்து வெளியே சொன்னால் குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படும் என்று ஆசிரியர் தன்னை மிரட்டியதாகவும் வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.
அவருடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆறு மாதங்களாக வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
Edited by Siva