போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்...பொதுமக்கள் அவதி
கேரள மாநிலத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்ஷிஸ் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது.அம்மாநில சட்டப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டுமெனக் கூறப்படுகிறது.
ஆனால் கடந்த 10 ஆண்டு காலமாக அங்கு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு எதுவும் அளிக்கப்படவில்லை எனக் கூறி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நள்ளிரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டம் 2 நாட்களுக்கு நடைபெறும் என தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் கடும் சிரத்திற்கு ஆளாகியுள்ளனர்.