1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 24 அக்டோபர் 2022 (14:17 IST)

நாளை 12 மணி நேரம் மூடப்படும் திருப்பதி கோயில்!

tirupathi
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை 12 மணிநேரம் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தீபாவளி பண்டிகை நாட்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவார்கள் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் நாளை சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் 8:11 முதல் இரவு 7.30 மணி வரை மூடப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது
 
இந்த நேரங்களில் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் பக்தர்கள் இந்த நேரங்களை கணக்கில்கொண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருவதற்கு திட்டமிட்டு கொள்ளும்படி  திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva