திருப்பதியில் 3 நாட்கள் வி.ஐ.பி. தரிசனம் ரத்து: தேவஸ்தானம் அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூன்று நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 24ஆம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. ஆனால் அதற்கு அடுத்த நாள் 25 ஆம் தேதி சூரிய கிரகணத்தை முன்னிட்டு காலை 8 மணி முதல் மாலை 7 மணிவரை நடை அடைக்கப்படும் உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது
எனவே தீபாவளி மற்றும் அதற்கு அடுத்த நாள் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் நவம்பர் 8-ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் அன்றைய தினம் காலை ஏழு முப்பது மணி முதல் 12 மணி வரை நடை சாத்தப்படும் என்றும் அன்றைய தினமும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது
Edited by Mahendran