திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 19 அக்டோபர் 2022 (11:07 IST)

சதுரகிரியில் தொடர் மழை; பக்தர்கள் செல்ல தடை! – வனத்துறை அறிவிப்பு!

sathuragiri
மாதம்தோறும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் நிலையில் இந்த முறை தடை விதிக்கப்பட்டுள்ளது.

சதுரகிரி வனத்துறை கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட மலைப்பகுதியில் உள்ள சுந்தரமகாலிங்கம் சுவாமி மலைக் கோவிலுக்கு பக்தர்கள் மாதம்தோறும் பவுர்ணமி மற்றும் பிரதோஷம் நாட்களில் பாத யாத்திரை செல்வது வழக்கமாக உள்ளது.

இந்த மாதமும் சனி பிரதோஷம் மற்றும் அமாவாசையையொட்டி வருகிற 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி செல்ல அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால் தற்போது வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் சதுரகிரி மலைப்பாதையில் பயணம் செய்வது ஆபத்தானது என்பதால் இந்த மாதம் சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. தீபாவளி நெருங்கி வரும் நிலையில் சதுரகிரி செல்ல காத்திருந்த பக்தர்களுக்கு இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edited By: Prasanth.K