தொடர்புடைய செய்திகள்
- தேர்தல் வெற்றிகளை AI தொழில்நுட்பம் தீர்மானிக்கும் காலம் வந்து விட்டதா?
- ''பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்'' - முதல்வர் மம்தா பானர்ஜி
- பிரிவினை வாதத்தை தூண்டுகிறார் சோனியா காந்தி: தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!
- கர்நாடகா தேர்தல்; பிரச்சாரம் இன்று நிறைவு! – சூறாவளி பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள்!
- இதை மட்டும் செய்தால் காங்கிரஸ், பாஜக 2 கட்சுகளும் தோல்வி அடையும்: மாயாவதி
கர்நாடக சட்டசபை தேர்தல்.. சற்றுமுன் ஆரம்பித்த வாக்குப்பதிவு..!
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற இருக்கும் நிலையில் சற்றுமுன் வாக்குப்பதிவு தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள அந்த கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்தது. பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் உள்பட பல பாஜக பிரபலங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு ராகுல் காந்தி பிரியங்கா காந்தி உள்பட பல பிரபலங்கள் பிரச்சாரம் செய்தனர். இந்த நிலையில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியதை அடுத்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளது என்பதும் இந்த தொகுதிகளில் ஐந்து கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 பேர் வாக்காளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க து.
தேர்தல் பணிகளில் சுமார் நான்கு லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாகவும் மின்னணு வாக்குப்பதிவு மூலம் தேர்தல் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
