வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 8 மே 2023 (14:56 IST)

பிரிவினை வாதத்தை தூண்டுகிறார் சோனியா காந்தி: தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

சோனியா காந்தி பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் தனது சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இன்று மாலைடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் சோனியா காந்தி தனது சமூக வலைதளத்தில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இது குறித்து பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. 
 
கர்நாடக மாநில தேர்தல் ஆணையத்தில் ’பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் சோனியா காந்தி பதிவிட்டதாக பாஜக குற்றம் சாட்டி உள்ளது. தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 
Edited by Siva